தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த “ஒமிக்ரான்” புதிய வகை கொரோனா தொற்று இதுவரை 17 நாடுகளில் பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. மேலும் இதுவரை கிட்டத்தட்ட 17 நாடுகளில் “ஒமிக்ரான்” புதிய வகை கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து 17 நாடுகளிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை “ஒமிக்ரான்” தொற்று பரவியுள்ள 17 நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:-
1. தென்ஆப்பிரிக்கா
2. ஹாங்காங்
3,. போட்ஸ்வானா
4. ஆஸ்திரேலியா
5. இத்தாலி
6. ஜெர்மனி
7. நெதர்லாந்து
8. இங்கிலாந்து
9. இஸ்ரேல்
10. பெல்ஜியம்
11. சுவிட்சர்லாந்து
12. கனடா
13. பிரான்சு
14. ஸ்பெயின்
15. போர்ச்சுக்கல்
16. டென்மார்க்
17. செக் குடியரசு.