ஆற்றைக் கடப்பதற்கு பாலம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நேற்று முன்தினம் பலத்த கனமழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள பேத்துப்பாறை பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றின் இருபுறங்களிலும் உள்ள மரங்களில் கயிறுகளை கட்டி அதனை பிடித்த படி விவசாய பொருட்களை எடுத்து செல்கின்றனர்.
இவ்வாறு கயிறு கட்டி ஆற்றை பொது மக்கள் கடந்து செல்லும் போது வெள்ளத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே பேத்துப்பாறை பெரியாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.