Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசிகளால் ஒமிக்ரான் வைரஸை எதிர்த்து போராட முடியாது”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

மாடர்னா கொரோனா தடுப்பூசி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான ஸ்டீபன் பான்செல் புதிய வகை “ஒமிக்ரான்” வைரசுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளால் திறம்பட செயல்பட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மாடர்னா கொரோனா தடுப்பூசி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான ஸ்டீபன் பான்செல் புதிய வகை “ஒமிக்ரான்” வைரசுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளால் திறம்பட செயல்பட முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் “ஒமிக்ரான்” வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை கண்டறிவதற்கு அதிக மாதங்கள் ஆகலாம் எனவும், கொரோனா தொற்று நீண்ட காலங்களாக தொடரலாம் எனவும் ஸ்டீபன் பான்செல் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அடுத்த ஆண்டிலிருந்து தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டியிருக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே உலகின் பல நாடுகளிலும் ஒமிக்ரான் பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலுக்கு வர வாய்ப்புள்ளதால் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் ஒமிக்ரான் வைரசுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பயோடெக் நிறுவனத்துடன் சேர்ந்து பைசர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ஆனால் ரஷ்ய நாட்டு சுகாதாரத்துறை ஸ்புட்னிக் தடுப்பூசி ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பல ஸ்புட்னிக் ஒமிக்ரான் பூஸ்டர்களை பிப்ரவரி 20, 2022-க்குள் வழங்குவோம் என்றும் கூறியுள்ளது. இதற்கிடையே இங்கிலாந்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் மாபெரும் அழிவை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |