Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வயிற்றிலேயே இறந்த குழந்தை…. இதுதான் காரணமா….? உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலேயே குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரண்டப்பள்ளி பகுதியில் சிரஞ்சீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜமீலா கான் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் நிறைமாத கர்ப்பிணியான ஜமீலா பிரசவத்திற்காக ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜமீலாவின் வயிற்றிலேயே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அறுவை சிகிச்சை மூலம் இறந்த ஆண் குழந்தையை மருத்துவ குழுவினர் வெளியே எடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த சிரஞ்சீவி மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஜமீலாவிற்கு முறையான சிகிச்சை வழங்கவில்லை. செவிலியர்களின் தொலைபேசி வழிகாட்டுதலின் படி தூய்மை பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |