Categories
மாநில செய்திகள்

JUSTIN : அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்…. வெளியான அறிவிப்பு….!!!

அதிமுகவின் தற்காலிகத் அவைதலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதிமுக உட்கட்சி தேர்தல் மற்றும் அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனை அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். கன்னியாகுமரியை சேர்ந்த அதிமுகவின் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக இருந்து வரும் தமிழ்மகன் உசேனுக்கு தற்காலிக அவைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |