சுற்றுலாவிற்கு சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூருக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த 9 வாலிபர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். இதில் 2 வாலிபர்கள் ஊட்டியை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் 7 வாலிபர்கள் மாலை நேரத்தில் தொரப்பள்ளியில் இருக்கும் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வினோத் என்பவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு வினோத்தின் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் வினோத்தின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.