Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை…. மருத்துவமனை மேற்கூரை மீது விழுந்த மரம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

அரசு மருத்துவமனை மீது விழுந்த மரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூரில் இருக்கும் அரசு லாலி மருத்துவமனையின் மேற்கூரை மீது மரம் முறிந்து விழுந்து விட்டது.

இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |