சேதமடைந்து காணப்படும் மின் கம்பத்தை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆலாம்பாளையம் கிராமத்தின் நடுவில் ஒரு மின் கம்பம் இருக்கிறது. இந்த மின் கம்பம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. ஆகவே இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. எனவே ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடக்கும் முன் சேதமடைந்து காணப்படும் மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.