Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பவானி கூடுதுறை” இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி…. வெளிவந்த தகவல்….!!

பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்வதற்கு பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 7 கொங்கு சிவதலங்களில் பிரசித்தி பெற்றது ஈரோடு பவானி கூடுதுறை ஆகும். இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் பெரும்பாலான பக்தர்கள் தினசரி வந்து வழிபட்டு செல்வார்கள். மேலும் இங்கு பக்தர்கள் பரிகாரம் செய்வது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக சங்கமேஸ்வரர் கோவிலுக்குள் சென்று வழிபடவும், கூடுதுறையில் பரிகாரம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது. ஆனால் கூடுதுறையில் பக்தர்கள் பரிகாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மீண்டும் கூடுதுறையில் பரிகாரம் செய்ய அனுமதி வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி மீண்டும் கூடுதுறையில் பக்தர்கள் பரிகாரம் செய்வதற்கு இன்று முதல் மாவட்ட நிர்வாகமானது அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கூடுதுறைக்கு வரும் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |