Categories
தேசிய செய்திகள்

ச்சீ இதென்ன இப்படி…? அப்பா பரிசாக கொடுத்த பைக்கை…. ஓட்ட கூச்சப்படும் மகள்…. ஏன் தெரியுமா…??

இந்தியாவில் மாவட்டங்கள் மற்றும் வாகனத்தின் வகைகளின் அடிப்படையில் பதிவெண்கள் வழங்கப்படுகிறது. அந்தவகையில்  வெள்ளை நிற நம்பர் பிளேட்டுகளில் கருப்பு நிறத்தில் எண்கள்  பதியப்பட்டால், அது தனிநபரின் வாகனம் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் டெல்லியிலும் வாகனங்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு டெல்லியில் வழங்கப்படும் இருசக்கர வாகனங்களின் முதலில்DL எனும் இரண்டு எழுத்துக்கள் டெல்லி மாநிலத்தை குறிக்கிறது. பின்னர் வரும் இரண்டு எண்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்டத்தில் குறிக்கும்.

அதன் பின்னர் வரும் எழுத்துக்களில்  C என்பது காரையும் S என்பது இருசக்கர வாகனத்தையும் குறிக்கும். அடுத்து வரும் எழுத்து மற்றும் எண்கள் வழக்கமான தொடர்ச்சி எண்களாக இருக்கும். அந்த வரிசையில் தற்போது வந்துள்ள எழுத்துக்கள்தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. டெல்லியில் இளம்பெண் ஒருவர் தீபாவளி பரிசாக தன்னுடைய தந்தையிடம் இருந்து ஒரு இரு சக்கர வாகனத்தை வாங்கி உள்ளார். ஆனால் அந்த வாகனத்தை தற்போது அவர் பயன்படுத்த முடியாமல் ஓரங்கட்டியுள்ளார்.

காரணம் என்னவென்றால் அதில் இருந்த DL35SEX0000என்ற  பதிவெண்கள்தான். சேர்த்து பார்த்தால் எதுவும் தெரியாது. ஆனால் பிரித்துப் படித்தால் எல்லாருமே முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. அதற்கு காரணம் இந்த எண்களில் இடையில் உள்ள “SEX” எனும் எழுத்துக்கள்தான்.  அந்த எண்ணை பார்த்து மற்றவர்கள் கேலி செய்ததால் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் அந்த பெண் ஓரங்கட்டி உள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடம் அந்தப் பெண்ணின் தந்தை பதிவெண்ணை மாற்றி கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த நபர், இதுபோன்ற எண்கள் கொண்ட வாகனங்கள் டெல்லியில் ஆயிரக்கணக்கில் ஓடுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவெண் ஆன்லைனில் வந்ததால் மாற்றித் தர முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |