Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “சிலர் பாசாங்கு செய்யக்கூடும்”.. மனம் நிம்மதியாக காணப்படும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சிலர் உதவுவது போல பாசாங்கு செய்யக்கூடும். உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள தாமதம் படிப்படியாக சீராகும். பணவரவை விட செலவு கொஞ்சம் இன்று கூடும். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரும் இருந்து ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.

பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை பளிச்சிடும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். மற்றவர்கள் ஆலோசனையை கேட்டு உங்களை நாடி வரக்கூடும். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். மனம் இன்று நிம்மதியாகவே காணப்படும். மாணவக் கண்மணிகள் மட்டும் இன்று கொஞ்சம் கூடுதலாக உழைத்து படியுங்கள்.

படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். ஆசிரியர்களின் சொல்படி கேட்டு நடந்து கொள்ளுங்கள். அதுபோலவே இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |