ஒமிக்ரான் வைரசை தடுக்கும் வகையில் பொதுமக்கள் முககவசம் அணிந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்ற ஒமிக்ரான் வைரஸ் இங்கிலாந்தில் தீவிரமாக இருக்கிறது. அங்கு இதுவரை 14 நபர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து இங்கிலாந்தில் கடைகள் மற்றும் பேருந்து, மெட்ரோ ரயில், விமானங்கள் போன்ற பொது போக்குவரத்து சாதனங்களில் பொதுமக்கள் கட்டாயமாக முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியபோது “இன்று நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள் பொறுப்பானவை ஆகும். இந்த புதிய வைரசை எதிர் கொள்வதற்கு அவகாசம் ஆகும். இதனால் நமக்கு தெரிந்தவரையில் தடுப்பூசிகளும், பூஸ்டர் டோஸ்களும் அனைவருக்கும் பாதுகாப்பாக அமையும். ஆகவே தகுதி வாய்ந்த அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். இவை புதிய வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதுடன் நம் ஒவ்வொருவரையும் பாதுகாக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.