துலாம் ராசி அன்பர்களே..!! இன்று நன்றி மறந்தவரை பெருந்தன்மை குணத்துடன் மன்னிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆதாய பண வரவில் சேமிப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு ஏற்படும். இன்று எதிர்பார்த்த பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு வந்து சேரும். மனநிம்மதி கொஞ்சம் குறைய கூடிய சூழலை சந்திக்கக் -கூடும். வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை இன்று அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் ஓரளவு உதவிகளையும் நீங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது மட்டும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் சாமர்த்தியமாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்று பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். அதனால் ஓரளவு மகிழ்ச்சி ஏற்படும்.
மாணவக் கண்மணிகள் இன்று கூடுதலாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். அப்போதுதான் அடுத்த பாடம் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்