Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பொது இடங்களுக்கு செல்ல தடை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி  போடும்  பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத 4.20 லட்சம் பேர் பேருந்து நிலையம், திரையரங்கம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |