மகரம் ராசி அன்பர்களே..!! இன்று செயலில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படலாம். நிதானமும் அக்கறையும் பின்பற்றுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. உறவினர் வகையில் அதிகம் பணம் செலவு செய்ய நேரிடலாம் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும் கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு சிறப்பாக வந்து சேரும்.
நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்களும் வந்துசேரும். வியாபாரப் போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். இன்று சிறப்பான நாளாக இருப்பதற்கு கூடுமானவரை ஆலயம் சென்று வாருங்கள். மனம் ஓரளவு நிம்மதியாக காணப்படும். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் படிக்க வேண்டியிருக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது சிறப்பு.
மற்றபடி குடும்பத்தில் இன்று எந்த பிரச்சினையும் இருக்காது. கலகலப்பு ஓரளவு இருக்கும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் கூட ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் அது போதும். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்