Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் மற்றும் புதுவையில்…. அடுத்த 24 மணி நேரத்தில்…. வானிலை மையம் அலெர்ட்…!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இயல்பை விட சராசரியாக 83 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. இதனையடுத்து நேற்று முதல் மழை சற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உள்ள மேலடுக்கு சுழற்சி குமரி கடல் பகுதி வரை நீட்டிப்பதன் காரணமாக அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என்றும் தாழ்வு மண்டலம் உருவான அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாகவும் வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |