அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு “ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா” என்ற புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நடைபாதை வியாபாரிகள், ரிக்ஷா, ஆட்டோ டிரைவர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர் தொழிலாளர்கள் தினமும் ரூ.2 செலுத்தி வருடத்திற்கு 36,000 பென்ஷன் வாங்க முடியும். இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு மாதம் 55 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். 18 முதல் 40 வயது உடையவர்கள் இந்தத் திட்டத்தில் இணைய தகுதியுடையவர்கள்.
இந்தத் திட்டத்தில் சேர வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் அட்டை தேவை. இதில் 18 வயது முதல் 40 வயது வரையிலான அமைப்பு சாரா தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள தகுதியுடையவர்கள் அரசின் பொதுச்சேவை மையத்திற்குச் சென்று https://maandhan.in/shramyogi என்ற முகவரியில் ஒரு கணக்கை ஆரம்பித்து அதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஆதார் கார்டு, ஜன்தன் வங்கிக் கணக்கு, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும்.