தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுமட்டுமல்லாமல் மலைப்பகுதிகளில் அவ்வபோது மண் சரிவு ஏற்படுகிறது. பாதைகளில் திடீரென விரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் ஆந்திராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பதி பயணத்தை 10 முதல் 15 நாட்கள் பக்தர்கள் தள்ளிவைக்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. சாலை சீரமைப்பு பணி நடைபெறுவதால் திருப்பதிக்கு வருவதை தவிர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளது.