எம்ஜிஆர், அம்மாவுக்கு பிறகு கட்சி இருக்காதுனு சொன்னாங்க.. ஆனா இன்னைக்கு அதிமுக வலுவான இயக்கமா இருக்கிறது என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.. அதேபோல 3 சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமில்லாமல் இக்கூட்டத்தில் ஒருமனதாக தமிழ்மகன் உசேன் அதிமுக தற்காலிக அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்..
இதையடுத்து கூட்டம் முடிவடைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கழக செயற்குழுக் கூட்டம் மிக எழுச்சியான முறையில் இன்று பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மாளிகையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.. 11 தீர்மானங்களும், அதேபோன்று சிறப்பு தீர்மானங்களும் செயற்குழு உறுப்பினர்களின் கரவொலியோடு ஒருமித்த கருத்தோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது..
எனவே இதில் குறிப்பிடப்பட்ட தீர்மானங்களாக, இந்த ஆட்சியின் அவல நிலை, தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத, அந்த சூழலை எல்லாம் கண்டனம் தெரிவித்தும், அதை நிறைவேற்ற வேண்டும். மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய அந்த நிலையையும், அதேபோன்று எதிர்வர இருக்கின்ற தேர்தல்கள்..
குறிப்பாக பேரூராட்சி, மாநகராட்சி, நகராட்சி போன்ற தேர்தல்களிலே கழகம் மகத்தான வெற்றியைப் பெறுவதற்கு ஒன்றுபட்டு நாம் உழைக்க வேண்டும். வெற்றியைத் தேடித் தர வேண்டும்.. அந்த வெற்றியை புரட்சித் தலைவரின் பாதங்களுக்கும், புரட்சி தலைவி அம்மாவின் பாதங்களுக்கும் சமர்பிக்க வேண்டும். அதே போன்று பொன்விழா ஆண்டில் எழுச்சியோடு பொன்விழாவை பட்டி தொட்டி எல்லாம் கொண்டாடும் வகையிலே கழக தோழர்கள் தயாராக வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
சிறப்பு தீர்மானமாக கழக ஒருங்கிணைப்பாளர், இணைய ஒருங்கிணைப்பாளர் அந்த தேர்வு முறை என்பது ஒற்றை வாக்கு மூலமாக அதாவது, single vote system என்று சொல்லக்கூடிய ஒற்றை வாக்கு மூலமாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற அந்த விதிக்கு முழுமையான அளவிற்கு செயற்குழு உறுப்பினர்கள் ஏக ஒருமனதாக அவர்கள் ஆதரவு தெரிவித்து கரவொலி எழுப்பி அந்த தீர்மானத்திற்கும் ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள்..
அன்வர் ராஜா நீக்கப்பட்டது ஏன்?
தற்காலிகமாக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.. திரு அன்வர் ராஜா அவர்களை பொறுத்தவரை கழக நடவடிக்கை, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அவர்கள் கொடுத்த அறிக்கையிலே நீங்கள் பார்த்திருக்கலாம். கழகத்தின் கொள்கைகளுக்கும், கழகத்தின் கோட்பாடுகளுக்கும், முரண்பாடான வகையில், கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில், செயல்பட்ட காரணத்தினால் கழகத்தினுடைய அடிப்படை பொறுப்பு உட்பட அத்தனை பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே கழகம் என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஒரு மாபெரும் இயக்கம். எப்படி பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் காலத்திலிருந்து, அதேபோல புரட்சி தலைவர் அம்மா காலத்திலிருந்து இயக்கத்தை பொருத்தவரை, ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கின்ற ஒரு இயக்கம்.. எனவே இயக்கத்தில் இருந்து கொண்டு, ஒரு கழகத்தில் இருந்து கொண்டு, கழக கூட்டங்களில் நடக்கின்ற விஷயங்கள்.. நா கூட மீட்டிங்ல (கூட்டத்தில்) கலந்துக்குறன். ஆனா கூட்டத்துல கலந்துக்கிட்டு கட்சியோட பாலிசி இத பத்தி தான் நா சொல்ல முடியும்.. ஆனா அங்கிருக்கின்ற கருத்துக்கள் பரிமாற்றப்பட்டது எல்லாம் வெளியே வந்து சொல்வது, அது மேல வந்து விமர்சனம் செய்வது என்பது எந்த விதத்தில் ஏற்க முடியும்.. அது ஒரு ஏற்க முடியாத கட்டுப்பாடு மீறிய செயல்.. கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்ற ஒரு செயலாகத்தான் கருதமுடியும்..
எனவே தான் இந்த போக்கை நாம் அனுமதிப்பதன் மூலம் கழகம் வந்து ஒரு கண்ட்ரோல் இல்லாமல் போகும்.. அதனால திரு. அன்வர் ராஜா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது, சரியான நேரத்தில் சரியான உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நா சொல்றன்..ஏனென்று சொன்னால் இதுபோன்ற ஒரு ஆரம்பத்தில் இதை கட்டுப்படுத்தவில்லை என்று சொன்னால் அப்ப ஆளாளுக்கு வந்து விமர்சனம் பண்ணிக்கிட்டு இருப்பாங்க.. கட்டுப்பாடு மிக்க இயக்கம்.. இந்த இயக்கத்தைப் பொறுத்த வரையில் புரட்சித் தலைவர் மறைவுக்கு பிறகு கட்சி இருக்காதுனு சொன்னாங்க.. புரட்சி தலைவி அம்மாக்கு பிறகு கட்சி இருக்காதுனு சொன்னாங்க.. ஆனா இன்னைக்கு கிட்டத்தட்ட கழகத்தைப் பொறுத்தவரையில் வலுவான இயக்கமா இன்னைக்கு இருக்கு..
கிட்டத்தட்ட நாங்க 66 எம்எல்ஏ, கூட 9 கூட்டணி கட்சிகள் மொத்தம் சேர்த்து 75.. 1 கோடியே 46 லட்சம் ஓட்டு, எங்களுக்கும் திமுகவுக்கும், 10 லட்சம் ஓட்டு தான் வித்தியாசம்.. 3% தான் வித்தியாசம் திமுகவுக்கும், எங்களுக்கும்.. அப்படி ஒரு மாபெரும் வெற்றியை தொண்டர்கள் முதல் தலைமைக்கழக நிர்வாகி வரை ஒற்றுமையுடன் இருக்கும் போது, ஒரு சிலர் வந்து இந்த ஒற்றுமைக்கு சீர்குலைக்கின்ற வகையில் கருத்துக்களை வெளியிட்டால் அது எப்படி கட்சி வந்து சும்மா பார்த்துக்கொண்டிருக்கும்.. எனவே கட்சியை பொறுத்த வரையிலே நடவடிக்கை எடுத்துருக்கு.” என்று பேசினார்..