Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ்…. பேராசிரியர் தமிழ்ச்செல்வன் அதிரடி கைது!!

சென்னையில் மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக தனியார் கல்லூரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பேராசிரியரை கைது செய்ய வேண்டும் என்று 2ஆவது நாளாக இன்றும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.. அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.. அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு ஆகியவற்றின் கீழ் கோயம்பேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவிகளின் போராட்டத்தை தொடர்ந்து, கல்லூரி முதல்வர் தங்கவேல் அளித்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட தமிழ்ச்செல்வனை கல்லூரி நிர்வாகம் உடனடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்..

Categories

Tech |