தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது இதனால் பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது இந்தநிலையில் சென்னையில் பெய்த தொடர் கனமழையால் கூவம் ஆற்றில் திடீரென நீரின் அளவு அதிகரித்து அதனால் பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள கூவம் ஆற்றங்கரையோரம் வசித்து வரும் பொது மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரட்டூர் ஏரியில் இருந்து நேற்று முன்தினம் 3,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கூவம் ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளது குறிப்பாக அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள பாரதிபுரம் கதிரவன் காலனி மஞ்சக்கொல்லை மற்றும் திருவீதியம்மன் தெரு ஆகிய குடியிருப்பு பகுதிகளை ஒட்டி கூவம் ஆற்றின் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
எனவே இதுகுறித்து தகவலறிந்த பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் சந்தீப் சிங் பேடி தண்ணீர் அதிகமாக உள்ள பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வின் போது மண்டல அதிகாரி மற்றும் நீர்வள ஆதாரத்துறை என்ஜினியர் கொலை உடனடியாக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கமிஷனர் சுகந்தியின் ஆணையிட்டார். அந்தப் உத்தரவின்பேரில் நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் 500 மணல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டு ஆற்றங்கரைகள் பலப்படுத்தப்பட்டது.
மேலும் 2 பொக்லைன் எந்திரங்கள் கொண்டும் கரைகள் உயர்த்தப்பட்டன. தொடர்ந்து மக்களைப் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சியின் சார்பில் 3,000 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று கூவம் ஆற்றின் நீர்மட்டம் குறைந்து சீராக உள்ள நிலையிலும் கூட, அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.