விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளங்குளி பகுதியில் விவசாயியான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்திற்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இரவு நேரத்தில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற மாடுகளை ஆறுமுகம் வீட்டிற்கு ஓட்டி வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஆறுமுகத்தை சுற்றிவளைத்த 4 மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.