ஜெர்மனியில் ஒரு பெண், தன் காதலனை தன்னோடு பேச வைப்பதற்காக போலியாக திருமணம் செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் வசிக்கும் ஜாக்குலின் என்ற பெண் ஒருவரை காதலித்துள்ளார். ஆனால், சில மாதங்களுக்கு முன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். எனினும், ஜாக்குலினிற்கு தன் காதலன் தன்னோடு பேச வேண்டும் என்ற ஆசை இருந்தது.
எனினும், நாமாக சென்று முதலில் பேச கூடாது, அவராக வந்து பேசட்டும் என்று நினைத்து, அவரை பேச வைக்க, புதிய திட்டம் தீட்டியிருக்கிறார். அதன்படி, காதலனை கோபப்படுத்த, வேறு ஒருவருடன் போலியாக திருமணம் செய்து, அந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால், அவர் பேசுவார் என்று நினைத்து, வாடகைக்கு மண்டபம் மற்றும் மாப்பிளையாக நடிக்க ஒரு நபரையும் ஏற்பாடு செய்திருக்கிறார்.
அதன்பின்பு, இருவருக்கும் திருமணம் நடப்பது போன்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து தன் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து விட்டு தன் காதலர் பேசுவார் என்று காத்திருந்தார். ஆனால், அவரின் முன்னாள் காதலர், அனைத்து புகைப்படங்களையும் பார்த்து விட்டு, தன் காதலிக்கு திருமணமாகி விட்டது என்று நம்பி அமைதியாக இருந்துவிட்டார்.
இதனை, ஜாக்குலின் டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்டு, அவன் என்னிடம் பேச வேண்டும் என்பதற்காக தான், நான் போலியாக திருமணம் செய்தேன் என்று கூறி தன் போலி திருமணத்தின் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். ஆனால், தற்போது வரை அவரின் காதலர் அவரிடம் பேசவில்லை..