8 முதல் 12 ஆம் தேதி வரை கணினிவழி தேர்வாக நடைபெற உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மாலை வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த தேர்வு கணினி வழி தேர்வாக 200க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தத் தேர்வில் பல குளறுபடி ஏற்பட்டதால் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மாலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் http://trb.tn.nic.in இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.