டிவிட்டர் நிறுவனம் இனிமேல் தனிப்பட்ட நபரின் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பதிவிட முடியாது என்று அறிவித்திருக்கிறது.
ட்விட்டர் நிறுவனம் இதற்கு முன்பே, தனிப்பட்ட நபர்களின் தொலைபேசி எண்களையோ, அல்லது அவர்களின் முகவரிகள் மற்றும் பிற தகவல்களையோ பதிவேற்றம் செய்ய முடியாது என்று தடை அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது தனிப்பட்ட நபர்களின் புகைப்படம் அல்லது வீடியோக்களை ட்விட்டரில் பதிவிட, அந்த குறிப்பிட்ட நபர் அனுமதிக்கவில்லை எனில் அவை நீக்கப்பட்டுவிடும் என்று அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.