பேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது தொடர்பாக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கானூர்பட்டி அந்தோணியார் கோவில் தெருவில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண் பிரகாஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 17/5/2020-ல் அருண் பிரகாஷ் செல்போனில் இருந்து அவருடைய பேஸ்புக்கில் சிறுமிகள் குறித்து ஆபாச படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்திருந்தார்.
இதை இணையத்தில் பலர் பார்த்ததோடு, பகிர்ந்தும் உள்ளனர். இதுகுறித்து ஆன்லைன் மூலம் சைபர் கிரைம் காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின்படி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டரான கலைவாணி மற்றும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அருண் பிரகாஷை கைது செய்தனர்.