Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. கொடைக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானலில் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கன மழையினால், அனைத்து அருவிகளிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி அருவி, கொடைக்கானல் அருவி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவி, தேவதை அருவி, கரடிச்சோலை அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காலை முதல் தொடர் மழை பெய்து வந்ததால், அருவிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், பொதுமக்கள் அவர்கள் வீடுகளிலும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளிலும் தொடங்கியுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பின்னர், இன்று காலை மழை சற்று குறைந்து சூரியன் உதித்துள்ளது.

Categories

Tech |