Categories
மாநில செய்திகள்

“ஆபாச படம்” 3000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி……. விரைவில் விசாரணை…… காவல்துறை அறிவிப்பு….!!

சிறுமிகளை வைத்து எடுக்கப்பட்ட சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மூன்று நாட்களில் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் இயக்குனர் ரவி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் காவல்துறையினரின் தொழில்நுட்ப குழுவினர் குழந்தைகள் வைத்து எடுக்கப்பட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச படங்களின் லிங்குகளை பிளாக் செய்தும்  அதனை இணையதளத்தில் இருந்து டெலிட் செய்தும் உள்ளனர். மேலும் பிற ஆபாச படங்களும் தொடர்ந்து இணையதளங்களில் இருந்து நீக்கப்பட்டு வருவதாக காவல் துறை கூடுதல் இயக்குனர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவர் ஆபாசபடங்கள் பார்ப்பவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது என்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து ஆபாச படங்கள் வைத்திருந்தவர்கள் பட்டியலோடு சேர்த்து அவர்கள் என்ன வீடியோ பார்த்தார்கள், டவுன்லோட் செய்தார்கள் என்பது முதற்கொண்ட தகவல்களை தற்போது சேகரித்துள்ளதாக தெரிவித்த அவர் இவை அனைத்திற்கும்  டிஜிட்டல் எவிடன்ஸ் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி இதுவரை 3000 பேர் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆபாச படங்களை பார்ப்பதை தவிர்க்குமாறும் அது நமது தமிழ் பண்பாடு கலாச்சாரத்திற்கு ஏற்றது அல்ல என்றும் அவர் தமிழக மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Categories

Tech |