Categories
மாநில செய்திகள்

அடுத்த ரெய்டு…. ஹிட் லிஸ்டில் சிக்கிய 3 பேர்…. முதல்வர் ஸ்டாலின் எடுத்த பைல்….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கே.சி வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. இதற்கு அடுத்ததாக யார் சிக்குவார்கள் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் திமுக அளித்த புகார் தொடர்பாக அந்த கட்சியின் அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சில நாட்களுக்கு முன்பே லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அரசு புறம்போக்கு நிலம் ஒன்று தனியார் நிறுவனத்திற்கு விற்கபட்டதில் மோசடி நடைபெற்றுள்ளதாக இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் ஆர்.பி உதயகுமார் ஆகியோர் மீது அவர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், கோயம்பேடு அருகே 10.5 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை பாஷ்யம் கன்ஸ்டிரக்ஷன் நிறுவனத்திற்கு சதுர அடி ரூ.12,500- க்கு விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில விற்பனை கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவான ஏலம் விடும் நடை முறை கடைபிடிக்கப்படாமல், வெளிப்பட ஏற்ற தன்மையில் குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக வைக்கப்பட்டதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்ற அச்சத்தினால் அவசரகதியில் இந்த நிலத்தின் விற்பனை தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மோசடி புகார் தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி இரண்டு நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |