கொரட்டூர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது கமிஷ்னர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் வட மேற்கு பருவ மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னையில் உள்ள கொரட்டூர் ஏரி நிரம்பி உள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் முழுவதும் கூவம் ஆற்றில் திறந்து விடப்படுவதால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக அண்ணா நகர் பகுதியில் உள்ள பாரதிபுரம், மஞ்சக்கொல்லை ,கதிரவன் காலனி, மற்றும் திருவீதி அம்மன் தெரு ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள கூவம் ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த சென்னை நகர கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கூவம் ஆற்றங்கரையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த ஆய்வின் போது மண்டல அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை என்ஜினியர்கள் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்குமாறு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மணல் மூட்டைகளை கொண்டு ஆற்றின் கரைகள் பலப்படுத்தபட்டன. மேலும் மஞ்சக்கொல்லை அரசு பள்ளி உட்பட இரண்டு இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. மேலும் மாநகராட்சி சார்பில் 3000 பேருக்கு உணவு பொட்டலங்கள் அளிக்கப்பட்டன.