ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் எண் அதிகாரப்பூர்வமானதுதானா? இல்லையா? என்ற சந்தேகம் இருக்கலாம்.
ஏனெனில் தற்போது போலியான ஆதார் அட்டைகள் வைத்திருப்பதாகவும், ஒரே ஆதார் எண்ணில் பல்வேறு ஆதார் அட்டைகள் வைப்பதிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகினறன. எனவே நமது ஆதார் எண் உண்மையானதுதானா என்று செக் பண்ணுவதுகட்டாயமாகும். ஆதார் எண்ணைச் சரிபார்க்க உங்கள் செல்போனில் ஆன்லைன் மூலமாக மிக எளிதாக எப்படி செக் பண்ணலாம் என்று பார்க்கலாம்.
ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி.?
முதலில் ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ முகவரியான https://uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
அதில் “Aadhar Services” என்பதை டிராப் டவுன் மெனுவில் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் “Aadhaar Verification” என்பதை கிளிக் செய்து, உங்களுடைய ஆதார் எண்ணைப் பதிவிடவும்.
தொடர்ந்து கேப்ட்சா குறியீட்டைப் பதிவிட்டு “Submit” கொடுக்கவும்.
இப்போது வரும் புதிய பக்கத்தில் உங்களுடைய ஆதார் தொடர்பான விவரங்கள் வரும். சரி செய்து கொள்ளலாம்.