முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆவுடையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் உள்ளனர். இதில் 2 மகன்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆவுடையம்மாள் கணவரிடம் சண்டை போட்டு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த மாயாண்டி மனநலம் பாதிக்கப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் மாயாண்டி திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாயாண்டியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.