தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலரும் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அதனால் தமிழக அரசு வேலை இல்லா நிலையை போக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு வாரமும் மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில் தற்போது திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த வேலை வாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் என்றும், முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலை இல்லாத 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், கல்விச் சான்றிதழ் நகலுடன் பங்கேற்கலாம். இதில் விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். வரும் டிசம்பர் 4 ஆம் தேதி நேர்காணல் நடைபெறும். மேலும் விபரங்கள் அறிய 04175-233381 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.