Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“CCTVக்கு கலர் பெயிண்ட்” ATMஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது….!!

சென்னை ஆவடி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் ஐ உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை  ஆவடி பகுதியை  அடுத்த முத்தா புதுபேட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்மில் நள்ளிரவில்புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த 4 கண்காணிப்பு கேமராக்களிலும் கலர் பெயிண்ட் அடித்து திருட முயன்றுள்ளார். இதனை வங்கியின் மும்பை தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணித்த அதிகாரி ஒருவர் உடனடியாக முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதனை தொடர்ந்து அங்கு சென்று கொள்ளையனை கைது செய்த காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு  அழைத்து சென்று விசாரணை செய்தததில் அவன் பெயர் உதயசூரியன் என்பதையும், பல்வேறு திருட்டு வழக்குகள் அவர் மீது ஏற்கனவே இருப்பதையும் கண்டறிந்தனர்.

Categories

Tech |