சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுகில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவிகள் என்று பலரும் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த அவரை சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது இரு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ,இதனை எதிர்த்து இரண்டு ஜாமீன் மனுக்களை கேட்டிருந்த நிலையில் இவருடைய இரண்டு ஜாமீன் மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.