வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 3-ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 29-ம் தேதி தொடங்கியது .இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் குவித்தது .இதைத் தொடர்ந்து நேற்று விளையாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் வீராசாமி பெருமாள் 5 விக்கெட் , வாரிகன்4 விக்கெட் கைப்பற்றி அசத்தினர் .இதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இதில் 2-ம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் குவித்தது.
இதனிடையே 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது .இதில் கைல் மேயர்ஸ் 36 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர் .இதனால் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் குவித்தது.இதில் இலங்கை அணி சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட் கைப்பற்றினார் . இதனால் 49 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் கேப்டன் கருணரத்னே 6 ரன்னும், ஒஷாதா பெர்னாண்டோ 14 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க 3-ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்தது .இதில் பதும் நிஷங்கா 21 ரன்னுடனும், சரித் அசலங்கா 4 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.