ட்விட்டர் நிறுவனத்தின் CEO ஆக பதவியேற்ற பராக் அகர்வாலின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனம் உலகின் மிகப்பெரிய இணையதள நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. அந்நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜாக் டோர்சி , தன் பதவியை இராஜினாமா செய்தார். அதன்பின்பு, இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் புதிய தலைமை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.
அமெரிக்க நாட்டின் பிரபல நிறுவனத்தில் மற்றொரு இந்தியர் முக்கிய பொறுப்பு வகிப்பது அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தியாவின் பல பிரபல நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு, கோடிக்கணக்கில் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பதவி ஏற்றிருக்கும், பராக் அகர்வாலுக்கு ஆண்டு சம்பளமே ஒரு மில்லியன் டாலர் தான்.
இந்திய மதிப்பில் 7 கோடியே 49 லட்சம் ஆகும். இதே போன்று 12.5 மில்லியன் டாலர் மதிப்புடைய, நிறுவன பங்குகளை நான்காண்டுகளுக்கு பெற இருக்கிறார். எனினும், கூகுள் மற்றும் மைக்ரோசாஃட் நிறுவனங்களின் CEO-க்களை விட இவரின் சம்பளம் பல மடங்கு குறைவாக இருக்கிறது.