மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், ttv தினகரன் அவர்கள் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முன்னதாக அண்ணாசாலையில் தொடங்கி ஜெயலலிதா நினைவிடம் வரை நடைபெற்ற பேரணியில் டிடிவிதினகரன் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் அமமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்பிறகு நினைவிடத்திற்கு சென்று டிடிவிதினகரன் மலர்வளையம் வைத்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினார்.