பிளம்பர் ஒருவரின் வீட்டில் முன்விரோதம் காரணமாக சிறுவர்கள் வெடிகுண்டு வீசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்த அரும்பார்த்தபுரத்தை சேர்ந்தவர் பிளம்பர் மகேந்திரன். இவருக்கும் உறவினரான சிவா என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று முன்விரோதம் காரணமாக சிவா என்பவரின் உறவினர்கள் மகேந்திரன் வீட்டில் வெடிகுண்டு வீசியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் பிளம்பர் மகேந்திரன் வீட்டில் வெடிகுண்டுவீசி சென்ற 6 சிறுவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.