Categories
மாநில செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில்…. ‘ புதுசா எந்த அங்கன்வாடியையும் திறக்கவில்லை;….  மத்திய அரசு விளக்கம்…!!!

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் புதிய அங்கன்வாடி மையங்களை திறப்பதற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள மொத்த அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை தொடர்பாகவும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ஏதேனும் அங்கன்வாடி மூடப்பட்டதா? என்று திமுக உறுப்பினர் சண்முகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த எம்பி ஒருவரும் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்படவில்லை.

ஆனால் ஆந்திர பிரதேசத்தை பொறுத்தவரை இதுவரை மொத்தம் 55 ஆயிரத்து 607 அங்கன்வாடி மையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக எந்த ஒரு அங்கன்வாடி மூடப்பட்டதாக மாநில அரசிடம் இருந்து இதுவரை தங்களுக்கு தகவல் வரவில்லை. அங்கன்வாடி ஊழியர்களுக்கு தேவையான ஊதியங்கள் முறையாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |