தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் மின்சாரத்தின் மூலமாக இயங்கக்கூடிய ட்ரோன் விமானம் ஒன்றை நகர்புற விமான சேவைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
தென்கொரியாவிலுள்ள சியோல் நகரத்தில் வைத்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் மின்சாரத்தின் மூலமாக இயங்கக்கூடிய ட்ரோன் விமானம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த விமானம் வானிலிருந்து செங்குத்தாக வந்து தரையிறங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை எதிர்வரும் காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக போக்குவரத்தில் இணைக்க சியோல் அரசு திட்டமிட்டுள்ளது.