Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி…. வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாமிகவுண்டம்பாளையம் புதூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வாத்தாள் என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் 22-ஆம் தேதி தெய்வாத்தாள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் தெய்வாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தெய்வாத்தாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் நகையை பறித்து சென்றது பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் சூர்யா, விக்னேஷ் மற்றும் சரஸ்வதி என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 4 பவுன் தங்க சங்கிலியையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |