Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

100 அடியை தாண்டிய மணிமுத்தாறு அணை நீர் மட்டம்…… விவசாயிகள் மகிழ்ச்சி….!!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அணையின் மேல்பகுதியில் உள்ள மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களுக்கு முன் கொட்டிய கன மழையால் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர்வரத்தால் நீர்மட்டம் ஒரே நாளில் 90 அடியில் இருந்து 96.4 அடியாக வேகமாக உயர்ந்தது.

இன்று காலை வினாடிக்கு 1,508 கன அடி நீர் வந்து கொண்டிருந்த  நிலையில், அணை திறக்கப்படாததால் நீர்மட்டம் 100 அடியை தாண்டி 100.5 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வரும் அதிக நீர்வரத்து காரணமாக வெள்ளம் பாய்ந்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை நீடிக்கும் பட்சத்தில் ஓரிரு நாளில் அணையின் 118 அடியை எட்டி முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |