மழைநீர் பள்ளியை சூழ்ந்து இருக்கின்ற காரணத்தினால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரங்காபும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்திருக்கிறது. இதில் மாங்குப்பை உள்பட 4 கிராமங்களில் வசிக்கும் 100-க்கும் அதிகமான குழந்தைகள் படிக்கின்றனர். தற்போது பெய்து வரும் கனமழை காரணத்தினால் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து இருக்கிறது. இந்நிலையில் தொடர் மழையின் காரணத்தினால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளிகள் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது.
இதனை அடுத்து பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி இருக்கின்ற காரணத்தினால் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை கேள்விக்குறியாகி உள்ளது. இதனை தொடர்ந்து விஷப் பூச்சிகள் மற்றும் பாம்புகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு அனுப்ப முடியாமல் அச்சத்துடன் இருக்கின்றனர். மேலும் அதிகாரிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.