Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (06.12.2019) நாள் எப்படி இருக்கு ?… முழு ராசி பலன்கள் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று முக்கிய பிரமுகர்களால் முன்னேற்றம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மனக்குழப்பம் விலகிச்செல்லும். இழுபறியாக இருந்த காரியங்கள் இனிதே நடந்து முடியும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகவே இருக்கும். உடல் நலம் சீராக இருக்கும். மற்றவருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.

அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் பிடிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சரியாகும். ஆனால் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.

கல்வியிலிருந்த தடை விலகி செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ போக வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். நண்பர்களால் நல்ல காரியம் ஒன்று நடைபெறும். வீடு இடம் வாங்க எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டாகும். இன்று சுபகாரியங்களில் இருந்த தடை நீங்கி சாதகமாகவே நடந்து முடியும். எதிர்காலத் தேவைகளுக்கு சேமித்து வைக்க ஆர்வம் ஏற்படும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

உங்களுடைய திறமை இன்று அதிகமாக வெளிப்படும். மனக் கவலை அகலும். உங்களுடைய குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடை தாமதத்தை கொஞ்சம் ஏற்படுத்திக்கொடுக்கும். பிள்ளைகள் நலனுக்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். எப்பொழுதுமே கொஞ்சம் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்படுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி சிறப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் .பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விஐபிக்களின் சந்திப்புகளும் கிடைக்கும். இன்று தொழில் வியாபாரம் கொஞ்சம் நிதானமாகத்தான் நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும் வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்கும் பொழுது மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

வீண் பலி ஏற்படாமல் கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் இன்று கூடும். பெண்களுக்கு மன திருப்தியுடன் காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் ஏற்படும். இன்று ஓரளவு மனம் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று செய்யும் காரியங்களில் மிகவும் நேர்த்தி இருக்கும். நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறப்புக்கள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வீர்கள். நினைத்ததை சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படகூடும்.

பிள்ளைகளுக்காக செலவு செய்யவும் நேரிடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். மற்றவர்கள் உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கலைத்துறையினர் திட்டமிட்டு காரியங்களை செய்து வெற்றி காண்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்களது செயல்களுக்கு ஆதரவு கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தர்ம தோஷங்கள் நீங்கி அனைத்து விதமான செல்வங்களும் ஏற்படும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். நீங்கள் தேடிச் சென்ற ஒரு நபர் உங்களை தேடி வரக்கூடும். இன்று உத்தியோகத்தில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். வீண் அலைச்சல் குறையும். காரியத்தில் இருந்த தடை நீங்கும். மற்றவர்கள் கூறும் குறைகளைப் பற்றி கவலைப்படாமல் உங்களுடைய காரியத்தை செய்வது நல்லது.

மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. இன்று அரசியல் துறையினர் வீண் அலைச்சலும் மன சோர்வும் ஏற்படும். கூடுமானவரை கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும்போதும் கூட ரொம்ப கவனமாக செல்லுங்கள். அது மட்டுமில்லாமல் யாருக்கும் எந்தவிதமான வாக்குறுதியையும் ஜாமீன் கையெழுத்தும் போடாதீர்கள். யாருக்கும் கடன்களும் வாங்கிக் கொடுக்காதீர்கள். இன்றைய நாள் இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். கொஞ்சம் கடினப்பட்டு பாடங்களைப் படியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை நீங்கள் சந்திக்கலாம். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

கன்னிராசி அன்பர்களே..!! இன்று கருத்து வேறுபாடுகள் அகலும் நாளாக இருக்கும். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல்கள் வந்துசேரும். சுப செலவுகள் உண்டாகும். தொழில் ரீதியாக வந்த மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். இன்று எப்பொழுதும் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியும் சுகமும் அதிகமாகும். பணவரவு திருப்திகரமாகவே இருக்கும். பல வகையிலும் பிறர் உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.

புத்தி சாதுரியம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை மட்டும் தவிர்ப்பது நல்லது. இன்று தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் கொஞ்சம் குறையலாம். வியாபாரம் தொடர்பான பண பரிவர்த்தனையில் கவனம் இருக்கட்டும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மட்டும் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில்  கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தடைகளை தாண்டி முன்னேற்றம் காணும் நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் நன்கு யோசித்து ஈடுபடுவது நல்லது. உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும். இன்று உத்தியோயோகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் கெளரவமும் அந்தஸ்து உயரும். துக்கமும் துன்பமும் நீங்கும். பணவரவும் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்த தடை விலகி செல்லும்.

இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். தொகை வரவு திருப்திகரமாக இருக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். இன்று கடுமையான சூழ்நிலைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன் பணி செய்பவரால் இருந்து வந்த காரியத்தடை நீங்கும்.

மன தைரியம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். சக கலைஞர்களுடன் இருந்த இடைவெளி குறையும். ஆன்மீக பயணம் செல்லும் நிலை உருவாகும். இன்று மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். சக மாணவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஸ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில்  உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை  ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று செல்வாக்கு உயரும் நாளாக இருக்கும். செயல்பாடுகளில் திறமை பளிச்சிடும். விஐபிக்களின் ஒத்துழைப்பு உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். காணாமல் போன பொருள் கைக்கு கிடைக்கும். இன்று பயணங்கள் செல்ல நேரிடலாம் வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும்.

சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைவது போலத் தோன்றலாம் பார்த்துக்கொள்ளுங்கள். சகோதரர் வகையில் ஏதாவது பிரச்சினை கொஞ்சம் தலை தூக்கலாம் கவனம் இருக்கட்டும். விருப்பமான நபரை இன்று சந்தித்து மகிழ்வீர்கள். இன்று மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். அனைவரின் ஒத்துழைப்போடு இன்று சிறப்பான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் கொள்ள வேண்டிய நாளாக  இருக்கும். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம். தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு குறையும். குடும்ப சுமை கூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயங்குபவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் குதூகலத்திற்கும் எந்த வித குறையும் இல்லை.

குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது மட்டும் எப்போதுமே நல்லது. எல்லாவகையிலும் நல்லதே உங்களுக்கு நடக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான சூழ்நிலை காணப்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம்  உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று நாணயத்தை காப்பாற்றும் நாளாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள். நடைபெறாது என்ற காரியம் சிறப்பாக நடைபெறும். மதிய நேரத்திற்கு பின் மங்களகரமான செய்திகள் வந்து சேரும். இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நிலவி வந்த போட்டிகள் விலகிச்செல்லும். உங்களுடைய பேச்சு மற்றவர்களை கவரும் விதமாகவே இன்று இருக்கும். அனுகூலமான பலன்கள் இன்று கிடைக்கும். தனவரவு சிறப்பாகவே இருக்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்ப்புகளும் இன்று விலகிச் செல்லும். இன்று நீங்கள் முக்கியமான பணியை  மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று விரோதங்களை வளரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். வீடு மாற்றம் உத்தியோக மாற்றம் உங்களுக்கு உறுதியாக கூடும். பக்கபலமாக இருக்கும் நண்பர்களில் ஒரு சிலர் விலகிச் செல்லக் கூடும். பற்றாக்குறை இன்று அதிகரிக்கும். மன குழப்பம் நீங்கும். காரியத்தில் வெற்றி இருக்கும். எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள். இன்று தடைப்பட்டுவந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகமும் கிடைக்கும். அதனால் நன்மை ஏற்படும்.

கலைத்துறையினருக்கு சகஜ நிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். மனதில் தைரியம் அதிகரிக்கும். இன்று கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் கூட ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று பணம் பரிவர்த்தனையின் மட்டும் கொஞ்சம் கவனமாக நடந்துகொள்ளுங்கள். இன்று தனவரவு கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். அதற்கேற்றார் போல் உங்கள் செயல்பாடுகள் இருக்கட்டும். இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும்.

மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறகூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக அமையும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |