Categories
மாநில செய்திகள்

FlashNews: டிசம்பரில் தமிழகத்தில் அதிகமாகும்….. சற்றுமுன் அலர்ட் அறிவிப்பு…!!

டிசம்பர் மாதத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை இயல்பை விட சற்று அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல முக்கிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை 63 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது இயல்பான 35 சென்டிமீட்டர் அளவைவிட 80 சதவீதம் அதிகமாகும்.

இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  132 சதவீதத்துக்கு மேல் மழை பெய்ய கூடிய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதத்தில் நீண்டகால சராசரியை விட கூடுதலாக பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இது தமிழகத்திற்கு மழை பெய்யக்கூடிய சாதகமான நிலையில்,இருப்பதால் டிசம்பர் மாதம் தமிழகத்தில் இயல்பை விட கூடுதலாக மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |