ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். நண்பர்களால் நல்ல காரியம் ஒன்று நடைபெறும். வீடு இடம் வாங்க எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டாகும். இன்று சுபகாரியங்களில் இருந்த தடை நீங்கி சாதகமாகவே நடந்து முடியும். எதிர்காலத் தேவைகளுக்கு சேமித்து வைக்க ஆர்வம் ஏற்படும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
உங்களுடைய திறமை இன்று அதிகமாக வெளிப்படும். மனக் கவலை அகலும். உங்களுடைய குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடை தாமதத்தை கொஞ்சம் ஏற்படுத்திக்கொடுக்கும். பிள்ளைகள் நலனுக்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். எப்பொழுதுமே கொஞ்சம் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்படுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி சிறப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்