Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரவி வரும் மர்ம காய்ச்சல்… 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு…. ஒரே நாளில் 2 சிறுமிகள் பலி…!!

மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகின்றது. இதனால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்த 7ஆம் வகுப்பு சிறுமிக்கும், புதுத் தெருவைச் சேர்ந்த 2ஆம் வகுப்பு சிறுமிக்கும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் கீழக்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் காய்ச்சல் குறையாமல் சிகிச்சை பலனின்றி 2 சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் கீழக்கரை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் சிகிச்சை அளிக்க கால தாமதம் ஏற்பட்டு இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே கீழக்கரை மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்றும், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மர்ம காய்ச்சலுக்கு ஒரே நாளில் 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |