கல்லூரி மாணவரை தாக்கிய 6 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாத்ராக் என்ற மகன் உள்ளார். இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே ஊரில் வசிக்கும் 23 வயது இளம்பெண்ணும், 17 வயது சிறுவனும் ஊரை விட்டு தலைமறைவாகி உள்ளனர். இதற்கு பெண்ணின் உறவினரான முருகன் என்பவர் சாத்ராக்கின் குடும்பத்தினர் தான் காரணம் என சந்தேகமடைந்தார்.
இந்நிலையில் முருகன் அவரது நண்பர்கள் சிலருடன் சென்று சாத்ராக்கை அடித்து உதைத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சாத்ராக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சாத்ராக்கை தாக்கிய முருகன், சண்முகராஜ், கோபிநாத், சிவராஜதுரை, சண்முகம், காளிராஜ் ஆகிய 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.