துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தடைகளை தாண்டி முன்னேற்றம் காணும் நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் நன்கு யோசித்து ஈடுபடுவது நல்லது. உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும். இன்று உத்தியோயோகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் கெளரவமும் அந்தஸ்து உயரும். துக்கமும் துன்பமும் நீங்கும். பணவரவும் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்த தடை விலகி செல்லும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்